ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நிச்சயம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
அத்துடன் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டணை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரணதண்டணை நிறைவேற்றம் ஒரு போதும் தீர்வாகாது.
ஏப்ரல் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும், பதவி துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கும் ஜனாதிபதி ஏன் இதுவரையில் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. குண்டுதாக்குதலுக்கு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் முக்கிய பொறுப்பு கூற வேண்டும். பொறுப்பு கூறலில் இருந்து எவரும் ஒருபோதும் விடுப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

