அமெரிக்க தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் கிடையாது!

309 0

அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் இலங்கையில் வெளிநாட்டு படைத்தளமொன்றிக்கு வழிவகுக்கும் நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் கிடையாது.

மாறாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே காணப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

இதே வேளை , நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என திட்டவட்டமாக இலங்கை அறிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் (SOFA)குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் மேலோங்கியுள்ள நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.