விபத்தில் ஒருவர் பலி

220 0
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல, ஹேன்விட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகனம் ஒன்று வழுக்கிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற போது மோட்டார் வானத்தில் மூவர் பயணித்துள்ளதுடன் அதில் பலத்த காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வேயங்கொட பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.