இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிலியிருந்து இராஜினாமா செய்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கும் முன்னர் அவர் மேலதிக சொலிஸிடர் ஜெனரலாக கடமையாற்றியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நிதிமோசடி பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விசாரணை ஆணைக்குழுக்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.
குறித்த அரச நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த உரையின் பின்னர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் கடந்த 17ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அக் கடிதத்தை நேற்று ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நாயகமான சுனேத்ரா ஜயசிங்கவை பதில் பணிப்பாளர் நாயகமாக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

