வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல்

344 0

குருநாகல் மாவட்ட வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று குருநாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் சி.ஐ.டியினர் விஷேட விசாரணை அறிக்கை ஒன்றை குருநாகல் நீதிமன்றில் முன்வைத்தனர் .

இதையத்து வைத்தியர் ஷாபி இன்று முற்பகல் குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வைத்தியரை  தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் 8இல்லையென பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதன்போது இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் சில நீதிமன்ற வளாகத்தில் கூடி வைத்தியரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை கானப்பட்டது,

இதையடுத்து குறித்த வைத்தியரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.