புதிய பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

70 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின்
வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று,யாழ்ப்பாணம் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் போது இவ்வாறு குறிப்பிட்டார்.