குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியது ஜே.வி.பி. – தயாசிறி

290 0

குண்டு தாக்குதல் நடத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது மக்கள் விடுதலை முன்னணியாகும். ஒக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கம் தொடந்து சென்றிருந்தால் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்காது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி திருட்டுத்தனமாக அரசாங்கத்துக்கு உதவிசெய்து வந்தது. அதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா பதவியையும் பெற்றுக்கொண்டது. இல்லாவிட்டால் 6 பேர் இருக்கும் கட்சிக்கு எப்படி எதிர்க்கட்சி கொரடா பதவி கிடைக்கும்.

அத்துடன் இவர்கள் அரசாங்கத்தின் அனைத்துவிடயங்களுக்கும் மறைமுகமாக ஆதரவளித்தே வந்திருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.