தேசிய வளங்­களை விற்­ப­தற்­கான சூழ்ச்­சியே காணி திருத்த சட்டமூலம்- பந்­துல

238 0

காணி திருத்த சட்ட மூலம் வெற்­றி­பெ­று­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது.  மக்­க­ளுக்கு  நன்மை   புரி­வ­தாகக் குறிப்­பிட்டுக் கொண்டு  ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான  அர­சாங்கம் தொடர்ந்து   தேசிய  வளங்­களைப்  பிற  நாடு­க­ளுக்கு விற்கும் சூழ்ச்­சி­யி­னையே    முன்­னெ­டுக்­கின்­றது என எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

வஜி­ரா­ஷ்­ரம விகா­ரையில் நேற்று   செவ்­வாய்க்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து  கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.

காணி திருத்­தச்­சட்ட மூலம்  நாளை  மறு­தினம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்ள உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த   மசோ­தா­விற்கு எதி­ராக   பல  மனுக்கள்   நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.   ஆகவே  இந்த   மசோ­தாவை   ஒரு­போதும்  பாரா­ளு­மன்ற  விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்ள முடி­யாது.   ஒரு­போதும்    இந்த   சட்டம் வெற்றி பெறு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

அர­சியல் பிர­சா­ரங்கள் ஏதும் தேவை­யில்லை என்று குறிப்­பிட்டு ஆட்­சிக்கு வந்த ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம்  தற்­போது அர­சியல் விளம்­ப­ரங்­களை பலப்­ப­டுத்திக் கொள்ள  விளம்­ப­ரத்­திற்கு மாத்­திரம் பாரிய நிதி­யினை  செல­வ­ழித்­துள்­ளது.

கம்­பெ­ர­லிய  செயல்திட்­டத்­திற்கு மாத்­திரம் பல கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின்   வரிப் பணம்   அர­சியல் பிர­சா­ரத்­திற்கு மோசடி செய்­யப்­ப­டு­கின்­ற­மை­யினை  எதிர்த்து  நீதி­மன்றில் நிதி­ய­மைச்சர் மங்­கள  சம­ர­வீர,   நிதி­ய­மைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக மனுத்­தாக்கல் செய்­துள்ளோம். அமைச்சரவையின் பிரதானி என்ற ரீதியில் ஜனாதிபதி  தேசிய  நிதி  அரசியல் விளம்பரத்திற்காக  மோசடி செய்யப்படுகின்றமையினை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க  வேண்டும் என்றார்.