நாட்டின் பல பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்படவாய்ப்பில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிப்பதை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுத்தியுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்படவாய்ப்புள்ளது என்று இலங்கை மின்சார சபை நேற்று தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்நிலையில், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், மின்வெட்டை அமுல்படுத்த வாய்ப்பில்லை என மின் சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

