ரக்னா லங்கா முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

286 0

குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்த ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர், விக்டர் சமரவீர, ஜூலை 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வகை்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்படுத்திய போதே, அவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட, 8 பேரை உடனடியாக கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவினருக்கு  5ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.