பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டாம் -மஹிந்த

554 0

தற்காலத்தில் மக்கள் தீவிரவாதத்தை எண்ணி பயந்து கொண்டு வாழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகல், வாரியபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும் இருப்பினும் மக்கள் இவ்வாறு பயப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.