மரண தண்டனை பிரச்சினைகளுக்கு தீர்வாகது-ஹெரிசன்

385 0
மரண தண்டனை​யை நிறைவேற்றுவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முடியாது என்று விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி ஹெரிசன் கூறினார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மரண தண்டனை​யை நிறைவேற்றுவதற்கு தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மரண தண்டனை​யை நிறைவேற்றுவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாக இருந்தால் உலகிலுள்ள பல நாடுகள் பிரச்சினைகளுக்கு தீர்வாக மரண தண்டனை​யை நிறைவேற்றும் என்று அமைச்சர் பி ஹெரிசன் கூறினார்.