ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை நினைத்து எதிரணி அச்சம் – கபீர்

385 0

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைநத் எதிரணியினர் ஐக்கிய தேசிய முன்னணியிடம் தோல்வி அடைந்து விட்டனர். அச்சத்தின் காரணமாகவே ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிந்துக்கொள்ள எதிரணியினர் ஆவலாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்கபாளராக களமறிக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள கருத்து அது அவரின் நிலைப்பாடாகும்.

அவரை போன்று ஏனைய அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளியிட முடியும்.

ஆனால் அது கட்சியின் இறுதி தீர்மானமாக அமையாது.  சகலரதும் நிலைபாட்டை கவனத்தில் கொண்டு கலந்துரையாடியதன் பின்னர் இறுதி தீர்மானம் எடுப்போம் என அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.