புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

293 0

நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சேவை நேரத்தில் குடிபோதையில் இருந்த சேவையாளர் ஒருவரை பதவி நீக்கியது சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

அதேவேளை குறித்த வேலை நிறுத்தம் காரணமாக எவ்வித காரியாலய புகையிரதங்களும் இன்று சேவையில் ஈடுபடவில்லை.

எவ்வாறாயினும் புகையிரத தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடத் தீர்மானித்ததாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது