போலி அமெரிக்க டொலர்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொலர்களை வழங்குவதாக தெரிவித்து 8 இலட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கொஹுவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து 100 டொலர் நாணயத்தாள்கள் 50 கைப்பற்றப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீரம்மா ஜீவரத்னம் எனும் தீலிபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

