புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு!

387 0

அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரிவித்த அச் சங்கத்தின் செயலாளர் லால் விதானகே குறிப்பிடுகையில்,

அவசரகால சட்டத்தை கொண்டு அரசாங்கம் புகையிரத தொழிற்சங்கத்தினருக்கு எதிரான அடக்குமுறைகளை முன்னெடுத்துள்ளது. தற்போது முன்னெடுத்துள்ள  புணிப்புறக்கணிப்பு போராட்டம் சம்பள பிரச்சிளைக்கோ  பதவி உயர்விற்கோ அல்ல தொழிலாளரின் உரிமைக்காகவே  பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளோம்.

புகையிரத சேவைகள் ஒழுங்கமைப்பு பிரதானயின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே அவர்  புகையிரத பொது முகாமையாளரினால் பதவி நீக்கபட்டார். இவருக்கு எதிராக ஒழுக்காற்று  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் குறிப்பிட்டும் எவரும் பொருட்படுத்தவில்லை. மாறாக பதவி நீக்கம் செய்யப்பட்டவரை மீள பதவியில் இணைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சினால் புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

கடமைக்கு  இடையூறு விளைவிக்கின்றமையினை உணர்ந்து   புகையிரத பொது முகாமையாளர் சுயமாக பதவி இராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு போக்குவரத்து அமைச்சே மூல காரணம் குற்றஞ்சாட்டப்பட்வருக்கு எதிராக  முறையான  விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது. ஆகவே புகையிரத சேவைகள் ஒழுங்குப்படுத்தல் சங்க பிரதானிக்கு எதிரான  நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் பதவி இராஜினாமா செய்துள்ள புகையிரத பொது முகாமையாளரை   நிபந்தனைகளின்றி மீள பணியில் இணைத்து கொள்ளவேண்டும் என்ற காரணியை முன்னிலைப்படுத்தியே  இப்பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுக்க தீர்மானித்துள்ளோம்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத திணைக்களத்தில் அங்கிகாரம் பெற்றுள்ள தொழிற்சங்கத்தினர், அரச சேவை தொழிற்சங்கத்தினர் உள்ளடங்களாக 50 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்துள்ளார்கள்.

இந்த கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு இன்று பிற்பகல் தொடக்கம்  மாலை 06 மணி வரை காலவகாசம் வழங்கப்பட்டது.

குறித்த காலத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கவில்லை இதனை தொடர்ந்தே போராட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. எமது கோரிக்கைக்கு தீர்வு  கிடைக்காவிடின் தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.