மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
இதில் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சுமார் 250 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மிப்தாரின் மனைவி சல்காவுடம் கலந்துகொண்டிருந்தார்.

