டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019 -பிரித்தானியா

1221 0

கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.

மாத தொடக்கம் முதல் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற ஆரம்பித்தன முதலில் பெண்களுக்கான நட்புரீதியான தமிழீழ பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு இரு இல்லங்களுக்கும் இடையில் இடம்பெற்றன அதில் சங்கிலியன் இல்லமும் எல்லாளன் இல்லமும் மோதிக்கொண்டன இறுதியில் சங்கிலியன் இல்லம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கு 12 வயதிற்கு உற்பட்ட மற்றும் 13 வயதிற்கு மேற்பட்ட அணிகளுக்கு என இரு உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.

12 வயதிற்கு உற்பட்ட அணியினர் அரை இறுதிக்கு முன்னர் 3:0 சங்கிலியனுக்கு என்று இருந்த போட்டி முழுநேரத்திற்கு 4:4 என்ற இலக்கிற்கு எல்லாளன் இல்லத்தினர் மாற்றியமைத்து விட்டார்கள் பின்பு 12 வயதிற்கு உற்பட்ட அணியினர் அரை இறுதிக்கு முன்னர் 3:0 சங்கிலியனுக்கு என்று இருந்த போட்டி முழுநேரத்திற்கு 4:4 என்ற இலக்கிற்கு எல்லாளன் இல்லத்தினர் மாற்றியமைத்து விட்டார்கள் பின்பு தண்டஉதையில் 1:2 என்ற விதத்தில் எல்லாளன் அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 13 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களின் உதைபந்தாட்ட போட்டியில் 4:2 என்ற விதத்தில் சங்கிலியன் அணி வெற்றி பெற்றது.

இவ்வாறு ஒவ்வொரு வாரமும் விளையாட்டு போட்டியின் குதூகலத்தில் மாணவர்கள் இருக்கு சிறுவர்களுக்கான விளையாட்டுக்களான பழம் பொறுக்குதல், சாக்கு ஓட்டம், கயிறு அடித்தல், தண்ணீர் நிரப்புதல், கல்லுப்பை எறிதல், தேசிக்காய் கரண்டி என பலதரப்பட்ட விளையாட்டுக்கள் இரண்டு நாட்கள் நடைபெற்று இறுதியாக கடந்த 30ஆம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் அணிநடை தொடக்கம், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், வினோத உடை, மற்றும் அனைத்து வித ஓட்டங்களுடன் இடம்பெற்ற விளையாட்டு போட்டி மலை 8 மணியளவில் நிறைவு பெற்றன.

இப் போட்டிக்கு கென்ற் காவல்துறை தொடக்கம் பலர் கலந்து சிறப்பித்தார்கள். இறுதியில் இந்த வருடத்திற்கான வெற்றி கேடயத்தை சங்கிலியன் இல்லம் தனதாக்கி கொண்டது. மாணவர்கள் மிகவும் உற்சாகமா கேடயத்தை தூக்கியேந்தியபடி மைதானத்தை சுற்றி ஓடித்திருந்தார்கள். இறுதியாக தேசியக் கொடி கையேந்தலுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.