பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் மேற்கொண்ட தாக்குதலினால் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மூத்த புதல்வரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர் ஆவார்.

