இலங்கை அரசுடன் அதி உயர்ந்த மட்டத்தில் மரண தண்டனை தொடர்பான கவலையை நோர்வே தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையை மீண்டும் மரண தண்டனையை அறிமுகம் செய்வதிலிருந்து விலகியிருக்குமாறு நோர்வே கேட்டுக் கொள்கிறது.
போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கான நோர்வே தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 43 வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொடூரமான தண்டனையான மரண தண்டனையை இலங்கை மீண்டும் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளமையை இட்டு நோர்வே ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2018 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவளித்த 120 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இவ்வாக்கு மரண தண்டனைணை நிறைவேற்றுவதிலிருந்து விளக்களிக்கும் உலகலாவிய போக்குக்கு ஆதரவளிப்பதாக அமைந்திருந்தது.

