அதிகாரம் இல்லாமல் போகும் என்பதாலே 19ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு-காவிந்த

470 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 18 மற்றும் 19ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம் அவர்களின் தனிப்பட்ட அபிலாசைகள் அதனூடாக நிறைவேறாமையே என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார்.

இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

18ம் திருத்தம் இல்லாததன் காரணமாக இன்று பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது போயுள்ளதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தான் விரும்புவதை செய்ய முடியாது இருப்பதன் காரணமாகவும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அதிகாரம் கிடைக்காது போகும் என்பதாலும் 19ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக காவிந்த ஜயவர்தன கூறினார்.