அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு

320 0

அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக் குருக்கள் இரு சுவாமி சிலைகள் திருட்டுக் குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

தேவஸ்தானத்தின் வழிப்பிள்ளையார் சிலை மற்றும் சந்தன கோபாலர் சிலை ஆகிய சுவாமி சிலைகளே திருடப்பட்டுள்ளனவாகும்.

இத்திருட்டு குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்ன தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதுவரை எவரும் கைது செய்யப்படவுமில்லை. ஆனால் பச்சை நிறத்திலான ஜீப்பொன்றில் திருடப்பட்ட சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தை தொடர்ந்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதே நிலையில் ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டப்பிரிவு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த பெறுமதிமிக்க விநாயகர் சிலையை

நேற்று நான்கு பேர் இணைந்து தூக்கிச் சென்துள்ளதாகரூபவ் ஹாலி-எலை பொலிஸ் நிலையத்தில்

புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விடயம் ஆலய சீ.சீ.டி.வி. கெமராவில் பதியப்பட்டுள்ளது.

இக் கெமராவின் துணை கொண்டு விநாயகர் சிலையை திருடிச் சென்றவர்கள் குறித்து ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த சந்திரசேக்கர தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.