நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அது குறித்து கவலையில்லை.ஆனால் அவர் கொலையுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடாது.
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா நியமிக்கப்பட்டால் ஆதரவு வழங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது :
என்னுடைய தற்போதைய நிலைப்பாடு கடந்த 30 வருட காலங்களுக்கு முன்னர் சென்றுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அது குறித்து கவலையில்லை. ஆனால் மக்களை கொல்லாத, ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒருவர் தான் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
கொலையுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்ட ஒருவரை எவ்வாறு மக்கள் தனக்கான தலைவராக ஏற்பார்கள்? அவ்வாறான ஒருவருக்கு நான் ஒருபோதும் ஆதவளிக்கப் போவதுமில்லை. எல்லா அரசாங்கமும் தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கொலைகளைச் செய்துள்ளன என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

