பெண்­ணொ­ரு­வரை முந்­தா­னையால் கழுத்தில் கட்டி இழுத்­துச்­சென்ற நபர்கள்

374 0

முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர், அப்­பா­தையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­மணி ஒரு­வரின் கழுத்தில், அவ­ரு­டைய  முந்­தா­னையைக் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்­பவம் ஒன்று, மினு­வாங்­கொடை பொலிஸ் பிரிவில் பதி­வா­கி­யுள்­ளது.

இச்­சம்­பவம், கடந்த திங்­கட்­கி­ழமை அதி­காலை ஐந்து மணி­ய­ளவில், மினு­வாங்­கொடை – கல்­லொ­ழுவை கிழக்கு கிராம சேவகர் முஸ்லிம் பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது,  கொழும்பு –  அப்­பல்­வத்­தையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்­மணி,  கல்­லொ­ழு­வையில் வசிக்கும் அவ­ரது மகள் வீட்­டி­லி­ருந்து கடந்த திங்­கட்­கி­ழமை  காலை 5 மணி­ய­ளவில்,  கொழும்­புக்குச்  செல்­வ­தற்­காக நடந்து சென்­று­கொண்­டி­ருந்த வேளை,  மினு­வாங்­கொடை கொழும்பு  வீதி திசை­யி­லி­ருந்து திரும்பி  கல்­லொ­ழுவைச் சந்­தியால் வந்த ஒரு முச்­சக்­கர வண்டி,  அப்­பெண்­மணி அரு­கிலே மிகவும் மெது­வாக நெருங்­கிய மறுகணமே முன்னே சென்று மீண்டும் பின்­னோக்கி வந்­துள்­ளது. அந்த முச்­சக்­கர வண்­டியிலிருந்த இருவர், அந்தப் பெண்­ணு­டைய   முந்­தா­னையை இழுத்­துப்­ப­றித்து அந்தப் பெண்ணின்  கழுத்தில் கட்­டி­விட்டு அவரைக் கீழே தரை­யிலே தள்­ளி­விட்டு அப்­ப­டியே முச்­சக்­கர வண்­டியை  ஓட்டிக்கொண்டு சற்றுத் தூரம் வரை இழுத்துச் சென்­றுள்­ளனர். அப்பெண் கத­றிய நிலையில், அவ­ரது உடல் தரை­யிலே உர­சி­ய­படி இழுத்துச் செல்­லப்­பட்­டுள்ளார்.   அத்­தோடு, அந்தப் பெண்  முந்­தா­னையை இழுத்­தெ­றிந்து,  எழுந்து நின்று கூக்­கு­ர­லி­டவே,  அந்த நபர்கள் இரு­வரும், இவரை விட்டு விட்டு அங்­கி­ருந்து  விரை­வாகத் தப்பிச் சென்­றுள்­ளனர்.

அப்­போது அவ்­வி­டத்­துக்கு வந்த இன்­னுமோர் முச்­சக்­கர வண்டி  அவ­ர­ருகே நிறுத்­தப்­பட்டு,  “என்ன நடந்­தது” என்று வினவ, அப்பெண் நடந்­த­வற்றைச்  சொல்லி அழ, வந்­த­வர்கள் அவரை மீண்டும்  மகள் வீட்டில் கொண்­டுபோய்ச் சேர்த்­துள்­ளனர். இப்பெண், தற்­போது மினு­வாங்­கொடை வைத்­தியசாலையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.  இத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில், மினு­வாங்­கொடை பொலிஸ் நிலை­யத்தில்  முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன், பொலிஸார் இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைத் தேடி வலை விரித்­துள்­ளனர்.

அத்­துடன், இச்­சம்­பவம் இடம்­பெற்ற பகு­தி­யி­லுள்ள சீ.சீ.ரி.வி. கம­ராக்­களின் பதி­வு­களின் உத­வி­யுடன் விசா­ரணை  நட­வ­டிக்­கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும், இதன் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் அடையாளம் கண்டுகொள்ள  முடியும் என்றும், மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.