பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருமா? – பெட்ரோலிய மந்திரி விளக்கம்

435 0

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைப்படிதான் முடிவு எடுக்க முடியும் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

ஏறக்குறைய அனைத்து பொருட்களும் சரக்கு-சேவை வரிவிதிப்பின் (ஜி.எஸ்.டி.)கீழ் கொண்டுவரப்பட்டாலும், பெட்ரோல், டீசல் மீது இன்னும் உற்பத்தி வரிதான் விதிக்கப்பட்டு வருகிறது. அதையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய ஜி.எஸ்.டி. சட்டம் 9(2)-வது பிரிவின்படி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைப்படிதான் முடிவு எடுக்க முடியும். அப்படி ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரும்போது, எந்த தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. விதிக்கலாம் என்பதை ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.