நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில்!

416 0

இன்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணிநேரம் வரை புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தனர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானத்துள்ளனர்.

வேதன பிரச்­சினை உள்­ளிட்ட  பல கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி  புகை­யி­ரத ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தினர் கடந்த வாரம் முன்னெடுத்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

புகை­யி­ரத சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக மாற்றும் நோக்­குடன்  ஓய்வு பெற்ற புகை­யி­ரத சேவை ஊழி­யர்­களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்­வ­தற்­கான வேலைத்­திட்­ட­மொன்றை மேற்­கொள்ள அரசாங்கம் உத்­தே­சித்­தி­ருப்பதற்கும் இவர்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.