இமதுவ, ஹவுபே பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு கல்கடஸ் வகை துப்பாக்கி மற்றும் துப்பாகியின் பாகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

