மொழி தடைக்களை குறைக்கும் வகையில் இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு பிரிட்டிஷ் சபை உதவி வருகின்றது. சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இங்கு பேசப்பட்டு வரும் நிலையில் மொழித் தடையை குறைக்கும் வகையில் பிரிட்டிஷ் சபை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து அதிகாரிகளுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நல்லிணக்க செயன்முறையை இலங்கையில் வழுப்படுத்தும் நோக்கில் நான்கு வருட திட்டமாக கடந்த மார்ச் 2018 இல் இத் திட்டம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மன் சமஷ்டி வெளிவிவகார அலுவலகமும் இணைந்து இலங்கையின் நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்தல்(எஸ். ஆர். பீ )திட்டத்திற்கு நிதி வழங்கி வருகிறது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டிஷ் சபை தமிழ் மற்றும் சிங்கள பயிற்சியாளர்கள் கொண்ட குழுவை இம்மாதம் அமைத்துள்ளது.
தமிழை இரண்டாம் மொழியாக கொண்ட அதிகாரிகளுக்கு இக் குழு தமிழையும், சிங்களத்தை இரண்டாம் மொழியாக கொண்ட அதிகாரிகளுக்கு சிங்களத்தையும் இக் குழு கற்பிக்கும்.
இக்குழுவிற்கு நான்கு வாரங்கள் தீவிர பயிற்சி வழங்கப்படும். இக் குழுவிற்கு இலக்கணம் மற்றும் சொல் வளத்திற்கு அப்பால் சுகாதாரம், கல்வி, சமூகசேவை, தொழில் வாய்ப்பு மற்றும் சமூகத்தில் பொலிஸாரின் பங்கு பற்றி எடுத்துறைக்கப்படும்.
சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட கண்டி பகுதியைச் சேரந்த அதிகாரிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தமிழ்மொழி பாடநெறியை பயிற்சி வழங்குபவர்கள் கற்பிப்பர்.தமிழ்மொழி அடிப்படை பரீட்சைமூலம் தராதரம் பாராது அவர்களது தேவை மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு கல அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவர்.
இத்திட்டத்தின் நிறைவில் 150 தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பயிற்று விப்பாளர்கள் தமிழ் மற்றும் சிங்களமென 600 பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்குவர்.
நல்லிணக்க செயற்பாடுகளின் போது மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது என இத்திட்டத்தை பிரிட்டிஷ் சபை கல்வி மற்றும் ஆங்கில பணிப்பாளர் லூசி கௌசர் பாராட்டியுள்ளார். இது நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அம்சமாக கலாசாரத்தை பண்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

