இவ்வாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளி, ஜூலை மாதம் வெளியிடப்படுமென பதில் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளியை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி, ஒரு வருடமாகியும் வெளியிடப்படவில்லை எனவும், இது அவர்களின் எதிர்காலம் தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பதில் உயர் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தபோது, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளியை இந்த மாதம் வெளியிட ஏற்கெனவே தீர்மானிக்கப்பட் டிருந்தது.
எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் காரணமாக தாமதமாகியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பல்க லைக்கழகங்களுக்கு மாணவர்களை உள் வாங்குவதற்கான வெட்டுப்புள்ளியை
வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

