வெலிக்கடை கைதிகள் 150 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

303 0

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதற்கமைய அவர்கள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் து.று.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வெலிக்கடை சிறைச்சாலையில், மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள 150 கைதிகளும் அடுத்த மாதத்தில் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுவர் என்றும் சிறைச்சாலை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.