மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் , மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் தொடர்பிலும் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
அத்துடன் மத்ரஸா பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம். இப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்கப் பெற வேண்டும். அடிப்படைவாத பாடசாலைகள் முழுமையாக இல்லாதொழித்தால் மாத்திரமே இளம் தலைமுறையினரை பாதுகாப்ப முடியும். தற்போதைய அரசாங்கத்தில் இது முடியாவிடின் ஆட்சி பொறுப்பினை ஏற்கவுள்ள எமது அரசாங்கத்தில் நிச்சயம் மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனையற்ற விதத்தில் முழுமையாக அரசுடைமையாக்கப்படும் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

