முடிவுக்கு வந்தது 48 மணி நேர போராட்டம் !

330 0

வேதன பிரச்­சினை உள்­ளிட்ட  பல கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி  புகை­யி­ரத ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தினர் முன்னெடுத்து வந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

அதன்படி புகையிரத சேவைகளானது இன்று மாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை தமக்கான தீர்வு உரிய வகையில் கிடைக்காவிடின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.