கெக்கிராவ, பிரதான வீதி பிரதேசத்தில் போலி 5000 ரூபா நாணயத் தாள்கள் 07 உடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் ஆபரணங்களை கொள்வனவு செய்வதற்காக போலி நாணயத் தாள்களை வழங்க முற்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி, பட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைதாகியுள்ளார். சந்தேகநபர் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

