புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து அரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்திலும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

