கோத்தாவின் ஆட்சேபனை – ரீட் மனு நிராகரிப்பு!

50 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் வழக்குக் கட்டணமும் இல்லாமலேயே அந்த ஆட்சேபனை மற்றும் மேன் முறையீட்டு ரீட் மனுக்களை நிராகரிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் இந்த தீர்ப்பை அறிவித்தனர்.  குறித்த ஆட்சேபனை மனுவை  மேன் முறையீட்டு நீதிமன்றுக்க விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியே அவர்கள் அந்த மனுவை நிராகரித்தனர்.

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ்  தமக்கு எதிராக நிரந்தர விஷேட மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய தடைவிதித்து உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ மேன் முறையீட்டு மன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.