யாழில் வெடி பொருட்கள் மீட்பு

59 0

யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடி பொருட்கள் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினா் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.

இந்நிலையில், வெடி பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.