இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இ.போ.ச. பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று (13) மாலையுடன் கைவிடப்பட்டுள்ளதாக தேசிய ஊழியர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் பிரதித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

