கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

69 0

கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடக்கிறது.  இதேபோன்று குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் உள்பட 8 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.