யேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.

1619 0

தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு நேற்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டு தமது அடையாளத்தையும் , பாரம்பரிய கலையையும் வெளிப்படுத்தி தனக்கான தனித்தன்மையை தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் பவனி வந்தனர்.

ஒரு மில்லியன் பார்வையாளர்களின் மத்தியில் ஈழத்தமிழர்கள் பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டாம், பாவைக் கூத்து , காவடி , சிலம்பாட்டம் , மாடு ஆட்டம், பறை இசைத்தல் என தமது பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர்.பழமை வாய்ந்த தமிழர் பாரம்பரிய கலைகளை பல்லின மக்கள் ஆர்வமாக பார்வையிட்டதோடு மட்டும் அல்லாமல் தம்மையும் இணைத்துக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்-

https://www.rbb-online.de/suche/#searchform_q__karneval,,20der,,20kulturen,,20tamilischer___start__0___fromSearchbox

ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சி பேர்லின் தொலைக்காட்சியிலும் சிறிய தொகுப்பாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஜேர்மன்நாட்டு தொலைகாட்சியில் கம்பீரமான தோற்றத்துடன் தமிழீழ தேசியக்கொடி .