வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் தொழில்புரிந்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியரான கருப்பையா ரஜேந்திரன் என்ற அப்துல்லா என்பவருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த தொழிற்சாலையில் கைதுசெய்யப்பட்ட 10 ஆவது சந்தேக நபரான கருப்பையா ரஜேந்திரன் என்ற அப்துல்லாவை இன்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய நபருக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் குண்டுகள் தாயரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றி ஊழியர்கள் சிலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்க்கது.

