19 மாதங்களாக அரசுடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சு விபரங்களை வெளியிடவேண்டும்

5160 0

Dinesh-Gunawardanaஅரசாங்கத்தை உருவாக்கிய “பிதா மகனான” தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக கூறுவது ஏமாற்று வித்தையின் உச்சக்கட்டமாகும் என மஹிந்த அணி ஆதரவு எம்.பி. தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமும் 7 மாதங்களும் கூட்டமைப்பு அரசுடன் நடத்திய இரகசிய பேச்சுக்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தினேஷ் குணவர்தன எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பங்காளிகளாக செயற்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே ஆகும். அதன் பின்னரான 100 நாள் ஆட்சியிலும் இன்று ஒரு வருடம் ஏழு மாதங்களாக தொடரும் அரசுக்கும் கூட்டமைப்பு முழு மையான ஆதரவை வழங்கி வருகின்றது.

அத்தோடு அரசின் பல்வேறு அபிவிருத்திக் குழுக்களிலும் தெரிவுக் குழுக்களிலும் அங்கம் வகிக்கின்றது.இக் கால எல்லைக்குள் அரசுடன் கூட்டமைப்பினர் பேச்சுவார்த் தைகளை நடத்திக்கொண்டு இணக்கப்பாட்டுடன் செயற்படு கின்றனர்.

எனவே ஆட்சி அமைப்பதற்கு முன்ப தாகவும் அதற்கு பின்னரும் அரசுடன் கூட்டமைப்பினர் நடத்திய இரகசிய பேச்சு வார்த்தைகள் என்ன என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.அதைவிடுத்து கூட்டமைப்பு அரசுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தப் போகின்றது.அதற்காக விசேட குழு நியமிக்கப் பட்டுள்ளது என்றெல்லாம் நாடகமாடி மக்களை ஏமாற்றக் கூடாது என்றார்.

Leave a comment