தமிழர்களின் சர்வதேச நட்புச்சக்தி யார் என்பதனை தீர்மானிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது

463 0

ananthi1யார் எமது சர்­வ­தேச நட்புச் சக்தி என்­பதை தமி­ழர்கள் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் எப்­போதோ வந்­து­விட்­டது. மிகவும் ஆபத்­தான கட்­ட­மைப்பு இன அழிப்பை எதிர்­கொண்­டி­ருக்கும் ஈழத்­த­மிழர் தேசிய இனம் தனது சுய­நிர்­ணய உரி­மைக்­கான சர்­வ­தேசப் பரி­மா­ணத்தை எப்­படி வகுத்­துக்­கொள்­கி­றது என்­ப­தி­லேயே எமது எதிர்­கால இருப்பு தங்­கி­யி­ருக்­கி­றது என்று வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் ஜெனி­வாவில் தெரி­வித்தார்.

ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நேற்று நடை­பெற்ற உப­குழுக் கூட்டம் ஒன்­றி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் இலங்கைத் தீவில் இனப்­பி­ரச்­சி­னையின் மூல காரணி தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான இன அழிப்பு என்­ப­தையும் அதற்கு ஆறு தசாப்­தங்­க­ளுக்கு மேலான தொடர்ச்­சி­யான வர­லாறு இருக்­கி­றது என்­ப­தையும் ஈழத்­த­மி­ழர்கள் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு முன்­வைத்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

இலங்கைத் தீவில் ஈழத்­த­மிழர் என்ற தேசிய இனத்­திற்கு எதி­ராக நடத்­தப்­பட்டு வரு­கின்ற இன அழிப்­புக்குப் பின்னால் ஒரு சித்­தாந்தம் இருக்­கி­றது. இந்த இன அழிப்புச் சித்­தாந்தம் இலங்கை அரச இயந்­தி­ரத்­தினுள் பல அடுக்­கு­களில் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இதை நியா­யப்­ப­டுத்தும் வகையில் இலங்­கையில் அர­சியல் பெரும்­பான்மை சிறு­பான்மை என்ற வகைப்­ப­டுத்தல் இன ரீதி­யா­கவே பேணப்­ப­டு­கின்­றது. இலங்கைத் தீவில் அர­சியல் ஜன­நா­யகம் என்­பது கிடை­யாது. அதைப் போலத் தோற்­ற­ம­ளிக்கும் இன­ரீ­தி­யான ஜன­நா­ய­கமே அங்­கி­ருக்­கி­றது.

ஓர் இன அழிப்புச் சித்­தாந்­தத்தில் வேரூன்­றி­யி­ருக்கும் ஒற்­றை­யாட்சி அரசால் இன­ரீ­தி­யான ஜன­நா­ய­கத்தைக் கூட ஒரு நேர்­மை­யான ஜன­நா­யக முறை­யாக சொல்­லாட்­சியைப் பயன்­ப­டுத்­து­வ­தனால் ‘நல்­லாட்­சி­யாக’ ஒரு­போதும் நடத்த முடி­யாது. அதை ஒரு போலி­யான நாட­க­மாக மாத்­தி­ரமே நடத்­த­மு­டியும்.

இலங்கை அர­சியல் யாப்பு என்­பது இந்த அடுக்­கு­களை ஒற்­றை­யாட்சி அரச இயந்­திரம் ஒன்­றூ­டாகக் கட்­டிக்­காப்­ப­தற்குப் பொருத்­த­மான வகை­யி­லேயே ஒவ்­வொரு கால­கட்­டத்­திலும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதுவே இலங்கைத் தீவின் உள்­ள­கத்­த­ள­மாகும். உல­க­ளா­விய அர­சி­யற்­சூழல் பிராந்­திய அர­சியற் சூழல் என்ற இரண்டு தளங்­க­ளையும் இந்த உள்­ள­கத்­த­ளத்தின் போக்­குக்கு சார்­பாகப் பேணிக் கொள்­வது என்­பதே இலங்கை ஒற்­றை­யாட்சி அரசின் வெளி­யு­றவுக் கொள்­கை­யாகும்.

இந்த வெளி­யு­ற­வுக்­கொள்கை முழு­மை­யா­கவே ஒரு நாடகம். அதில் நடிப்­ப­வர்கள் போலி­யான செய்­தி­களை உல­குக்குச் சொல்­ப­வர்கள். இதற்கு அப்பால் சர்­வ­தேச அர­சியல் அரங்­கிலும் ஒவ்­வொரு சக்­தி­மிக்க நாடும் தனது உள்­ளகத் தேவையை முன்­னி­லைப்­ப­டுத்­தியே தனது வெளி­யு­ற­வுக்­கொள்­கையைத் தீர்­மா­னிக்கும். இதிலே அவர்­க­ளுக்குத் தேவை­யான நாட­கத்தில் இலங்கை அரசின் நாட­கமும் ஒரு பங்­காக அவர்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­கி­றது.

நாட­கங்­களின் உல­கமே ராஜ­தந்­திரம் என்றும் இதிலே நாங்­களும் நடி­கர்­க­ளாக வேண்டும் என்றும் நாமும் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கிறோம்.இப்­ப­டியே எல்லா அர­சு­களும் ஒன்று சேர்ந்து நடத்­து­கின்ற இரா­ஜ­தந்­திர நாட­கத்தின் கடு­மை­யான தாக்­கங்­களுக்­குள்ளே தான் இங்கே ஜெனிவாவில் இயங்­கு­கின்ற மனித உரி­மை­களை மையப்­ப­டுத்­திய சர்­வ­தேச நீதியும் சிக்­குப்­பட்­டுக்­கி­டக்­கி­றது.

இங்கே தமி­ழர்­க­ளுக்­கான வெளி­யுற­வுக்­கொள்­கையை முன்­னெ­டுப்­ப­தற்­கென்று ஒரு அரசும் இல்லை. 70 மில்­லியன் தமி­ழர்­களைக் கொண்ட இந்­திய அர­சிடம் தனது மக்­க­ளான தமி­ழக மக்­களின் தமி­ழக அரசின் ஒன்­றித்த கருத்தை மதிப்­ப­ளிக்கும் வெளி­யு­றவுக் கொள்கை இல்லை.

இந்தச் சூழலில் எமது காயங்­க­ளையும் எமது இழப்­பு­க­ளையும் காணா­மற்­போன எங்கள் உற­வு­க­ளையும் கொன்று குவிக்­கப்­பட்ட எமது மக்­க­ளையும் குறித்து நாம் பேசு­வதை குரல்­கொ­டுப்­பதைக் கூட சுதந்­தி­ர­மாகச் செய்­ய­மு­டி­யவில்லை. முடி­யாத வகையில் எம்மைக் கையா­ளு­வ­தற்­கென்று பல வல­யங்­க­ளையும் நடி­கர்­க­ளையும் முழு­நேர வேலைக்கு அமர்த்தி நாம் கையா­ளப்­ப­டு­ப­வர்­க­ளாக மாற்­றப்­பட்­டு­வ­ரு­கின்றோம்.

ஆகவே ஈழத்­த­மி­ழரின் சுய நிர்­ணய உரிமை என்­பது இந்தக் கையா­ளு­கை­க­ளுக்கு உட்­ப­டாமல் சுய­மாக எந்த அரசின் தய­வையும் கோரி­நின்று மண்­டி­யிட்டுக் கொள்ளும் அர­சி­ய­லாக நாட­க­மாக அமை­யக்­கூ­டாது. அது உரி­மையின் பாற்­பட்­ட­தா­கவும் நேர்­மை­யா­ன­தா­கவும் மனி­த­கு­லத்­திற்கு நன்­மை­யா­ன­தா­கவும் அமை­ய­வேண்­டு­மானால் ஈழத்­த­மி­ழரின் சுய­நிர்­ணயக் கோரிக்­கைக்­கான வெளி­யகப் பரி­மாணம் என்ன? அது எந்தத் தளத்தில் அமை­ய­வேண்டும்? என்­பது குறித்த தெளி­வான கொள்கை சார்ந்த அணு­கு­முறை எம்­மிடம் இருக்க வேண்டும்.

யார் எமது சர்­வ­தேச நட்புச் சக்தி என்­பதை தமி­ழர்கள் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் எப்­போதோ வந்­து­விட்­டது. மிகவும் ஆபத்­தான கட்­ட­மைப்பு இன அழிப்பை எதிர்­கொண்­டி­ருக்கும் ஈழத்­த­மிழர் தேசிய இனம் தனது சுய­நிர்­ணய உரி­மைக்­கான சர்­வ­தேசப் பரி­மா­ணத்தை எப்­படி வகுத்­துக்­கொள்­கி­றது என்­ப­தி­லேயே எமது எதிர்­கால இருப்பு தங்­கி­யி­ருக்­கி­றது.

அதைப்­பற்றி ஜெனிவா நாடக மேடையில் கலந்­து­கொள்­கிற கலந்து கொள்­ளாத தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் பகிரங்கமாக தமது கொள்கையை முன்வைக்குமாறு எமது விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய அனைவரின் ஆன்மாக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையின் சர்வதேசப் பரிமாணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வகுப்பதில் எமது முதலமைச்சரான சி.வி.விக்கினேஸ்வரனின் பங்கையும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பங்கும் அவசியமானதாக எனக்குப்படுகிறது.

ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான அடுத்த நகர்வு அதன் வெளியுறவுப் பரிமாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று எனது கருத்தை முன்வைத்து அமர்கிறேன் என்றார்.

Leave a comment