யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல் போட்டிகள் டியுஸ்பேர்க் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இப்போட்டிகளில் யேர்மனியிலுள்ள பதினொரு தமிழாலயங்களைச் சேர்ந்த நூறு மாணவ மாணவிகள் பங்குபற்றி வெற்றிப் பதக்கங்களையும் வெற்றிக் கேடயங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதில் முதலாமிடத்தை டியூஸ்பேர்க் தமிழாலயமும்
இரண்டாமிடத்தை டுசில்டோர்ப் தமிழாலயமும்
மூன்றாமிடத்தை மேபுஸ் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.





























































































































