போன்களுடன் சீனப் பிரஜை உட்பட மூவர் கைது

348 0

நீர்கொழும்பு ஏத்துக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து  இலத்திரனியல்  தொலைத்தொடர்பு சாதனங்களுடன் சீன பிரஜை உட்பட 3  பேரை விசேட அடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 402 ஐ போன்கள் ,17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள்,மற்றும் 60 ரௌட்டர்கள் மற்றும்  3 மடிக்கணினி ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் வைக்கற்றியுள்ளனர்.

இச்சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.