திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிராம் 800 மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம்வைத்திருந்த இருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வென்ராசன்புர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 41 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் ஹேரொயினுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

