இறுதி அனுமதி வரும் வரை இந்தியா காத்திருக்கின்றது

490 0

Indian-Flag-Images-Free-Download-e1467103792995சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பதில் இந்­தியா பூரண தயார்­நி­லை­யி­லேயேஉள்­ளது. இலங்­கையின் இறுதி தீர்­மானம் தெரி­விக்­கப்­படும் நிலையில் உட­ன­டி­யாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்போம் என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திரமோடி ஆகி­யோரின் சந்­திப்­பிலும் இந்த விடயம் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எனி னும் திரவ இயற்கை வாயுவும்பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என இலங்கை கூறு­வது சாத்­தி­ய­மற்ற விடயம் எனவும் இந்­திய மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­யது.

இந்­தி­யா­வுக்கு வஉ­டக சுற்­று­லாவை மேற்­கொண்­டுள்ள இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழுவை இந்­திய எரி­சக்தி மற்றும் அனல்மின் அமைச்சின் செய­லாளர் பி.கே.பூஜாரி சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்­கப்­ப­டு­வது தொடர்பில் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய இரண்டு நாடு­களின் ஆத­ரவும் உள்­ளது. திரு­கோ­ண­ம­லையின் சம்பூர் பகு­தியில் இவ்­வா­றான அனல்மின் நிலையம் ஒன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் இலங்­கையின் சூழ­லியல் சிக்­கல்கள் மற்றும் மக்­களின் பாது­காப்பு தொடர்­பிலும் கடந்த காலத்தில் இருந்து ஆரா­யப்­பட்டு வந்­துள்­ளது.

இந்­நி­லையில் இவ்­வாண்டு பெப்­ர­வரி மாதம் 16ஆம் திகதி இலங்­கையின் சுற்­றுச்­சூழல் மத்­திய அவ­தான நிலையம் எமக்கு அறிக்­கை­யொன்றை முன்­வைத்­தி­ருந்­தது. சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்­கப்­பட சாத­க­மான நிலை­மை­களை அதில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள போதிலும் சில நிபந்­த­னை­க­ளையும் அவர்கள் முன்­வைத்­துள்­ளனர். எனினும் இலங்கை தரப்பு முன்­வைத்­துள்ள நிபந்­த­னை­களை எம்மால் ஏற்­று­கொள்ள கூடிய வகை­யி­லேயே உள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பது தொடர்பில் இந்­தி­யாவின் பக்கம் இருந்த அனைத்து செயற்­பா­டு­களும் சரி­யாக நிறை­வ­டைந்­துள்­ளன. எனினும் இலங்­கையின் இறுதி தீர்­மானம் இன்னும் எமக்கு வராத கார­ணத்­தினால் நாம் அதற்­கான அனு­மதி கிடைக்கும் வரையில் காத்­தி­ருக்­கின்றோம்.

இலங்­கையின் முடி­வுகள் எமக்குக் கிடைத்­த­வுடன் அடித்த 9 தொடக்கம் 12 மாதங்­க­ளுக்குள் சம்பூர் அனல் மின்­நி­லையம் அமைப்­பது தொடர்­பி­லான உரிய நிறு­வ­னங்­க­ளுக்­கான விலை­ம­னுக்­கோரல் விடப்­படும். அதன் பின்னர் அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்­டு­க­ளுக்குள் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி­களும் மேற்­கொள்­ளப்­படும் . மேலும் இந்த சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்­கப்­படும் நிலையில் 25ஆண்­டு­க­ளுக்கு அதற்­கான பயனை பெற்­றுக்­கொள்ள முடியும். அதன் பின்னர் மீளவும் புன­ர­மைக்­கப்­ப­ட­வேண்டும். எனினும் அமை­வையும் செயற்­பா­டு­க­ளையும் பொருத்து கால நீடிப்பு தொடர்பில் ஆராய வாய்ப்­புகள் உள்­ளன.

அதேபோல் கடந்த முறை இலங்­கையின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறே­சென மற்றும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி சந்­திப்­பின்­போது இந்த சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பக்­கப்­படும் நிலையில் அதற்­கான பாவ­னையில் திரவ இயற்கை எரி­வா­யுவை பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன.

இதில் இந்­தி­யா­வுக்கு எந்த சிக்­கலும் இல்லை. எனினும் நிலக்­க­ரிக்கு பதி­லாக இயற்கை எரி­வாயு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது அதிகளவிலான செலவையும் காலத்தையும் எடுக்கும். இப்போது ஆரம்பிக்கப்பட திட்டம் இருக்குமாயின் இயற்கை திரவ எரிவாயுவை பயன்படுத்துவதாயின் இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதை விடவும் நிலக்கரியின் பாவனைகள் மிகவும் உகந்தது என்றார்.

Leave a comment