ஆயிரக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிய சிங்களம்.

454 0

சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கண்டியில் இன்று(திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆளுநர்களான ஹிஸ்ர்ல்லா மற்றும் அசாத் சாலியை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரம் அவகாசம் தருவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அவ்வாறு நடைபெறாது போனால், அனைத்து மகா சங்கத்தினரையும் இணைத்துக் கொண்டு, நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்போம் என ரத்ண தேரரை சந்தித்த போது ஞானசார தேரர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டி நகரம் முழுவதும் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் இன்று மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கண்டி சிங்கள வர்த்தகர் முன்னணியின் செயலாளர் வஜிர கீர்த்தி தெரிவித்துள்ளார்.