பம்பலப்பிட்டி – கறுவாத்தோட்டம் பகுதிகளில் வாகனப்போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு!

317 0

கொழும்பு  பம்பலப்பிட்டி  , கறுவாத்தோட்டம்   பகுதிகளில்  மழைநீர்  வடிந்தோடுவதற்காக சுரங்க  வடிகால் அமைக்கும்  பணிகள்  மேற்கொள்ளப்படுவதால்  மூன்று மாதங்களுக்கு குறித்த  பகுதிகளில்  உள்ள  விதிகளில்  வாகனங்களின்  போக்குவரத்துக்கு  மாற்று  ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருக்கின்றது.

பிலிப்குணவர்த்தன மாவத்தை விளையாட்டுதுறை  அமைச்சிற்கு   அண்மித்த  துன்முல்ல   சுற்றுவட்டபாதை வரையும்  , பிலிப்குணவர்த்தன மாவத்தை சந்தி தொடக்கம் ஸ்ரான்லி விஜசுந்தரமாவத்தை , இலங்கை மன்றச்சந்தி  வரையிலான  பகுதிக்கும்  கலேல்  ஆபர் பகுதி  காலி வீதி , கடற்கடை வீதி  வரையிலான  பகுதிகளிலேயே  வீதிப்போக்குவரத்து  மாற்று  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ்  தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மூன்று மாத  காலப்பகுதியில்  வாகனசாரதிகள்  சிரமத்தை எதிர்நோக்காத வண்ணம்  மாற்றுவழிகளை  பாவிக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

ஸ்ரான்லி விஜயசுந்தர  மாவத்தையின்  ஒருபகுதிக்கு செல்லும்  வாகனங்கள் மாத்திரம்   ( பிலிப் குணவர்தன  மாவத்தை  ஊடாக  பௌத்தாலோக மாவத்தை வரை  ) எதுவித தடையுமின்றி  பயணிக்க  முடியும்.

பௌத்தாலோக மாவத்தையிலிருந்து   ஸ்ரான்லி  விஜசுந்தரமாவத்தை  நோக்கி பயணிக்கும் வாகனங்கள்  பௌத்தாலோக  மாவத்தை , துன்முல்ல  சந்தி  ஊடாக  சுதந்திர சுற்றுவட்டதினூடாக   பிலிப்குணவர்த்தன  மாவத்தைப குதியை  சென்றடைய  முடியும்.