மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

304 0
கொடகவெல, மெந்தேகம பகுதியில் உள்ள வீடொன்றினுள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பல காலமான இருந்த பணப்பிரச்சினை ஒன்றின் காரணமாக நேற்று (30) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெந்தேகம, யஹலவல பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மண்வெட்டியில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை சம்பவத்தின் சந்தேகநபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.