வவுனியா வரவேற்கிறது வளைவை ஆக்கிரமித்துள்ள படையினர்!

440 0

வவுனியா மூன்று முறிப்புப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா வரவேற்கின்றது என்று எழுதப்பட்டுள்ள வளைவு கடந்த சில தினங்களாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு படையினரைச் சித்தரித்தும் தனிச்சிங்கள மொழியில் எழுதப்பட்டு வளைவு ஒன்று நிரந்தரமாக சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

தென்பகுதியிலிருந்து கண்டி வீதிவழியாக வவுனியாவிற்கு வருபவர்களை வரவேற்கும் பிரதான வளைவு வவுனியா நகருக்குட்பட்ட மூன்றுமுறிப்பு பகுதியில் நிரந்தரமாக நீண்டகாலமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அண்மைக்காலமாக அதற்கு முன்பாக சில அடி தள்ளி நிரந்தரமாக கம்பியினால் வளைவு ஒன்று அமைக்கப்பட்டு படையினரைச்சித்தரிக்கும் படங்களுடன் ஊருக்குள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம் என்று தனிச்சிங்கள மொழியில் மட்டும் எழுதப்பட்ட வாசகத்துடன் நிரந்தரமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இச் செயற்பாடானது ஒரு இனத்தின் மீது ஆக்கிரமிப்பு தன்மையை வெளிக்காட்டியுள்ளது. இவ்விடயத்தில் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் எவரும் வாய் திறந்து தட்டிக்கேட்கவில்லை என்றும் இவ்விடயத்தில் கண்டுகொள்ளாத்தன்மையுடன் செயற்படுவதாகவும் வன்னியைப் பாதுகாக்கும் மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

தமிழ் தெற்கு சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு  தனிச்சிங்களத்தில் வளைவு அமைக்கப்பட்டு வவுனியாவை வரவேற்கும் வளைவை மறைக்க முற்பட்டுள்ளதையும் ஆக்கிரமிப்புத் தன்மையையும் அவதானிக்க முடிந்துள்ளது இவ்விடயத்தில் வடமாகாண ஆளுநர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வன்னியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிவருகின்றனர்.

யுத்தம் நிறைவுற்ற பிற்பாடு வடபகுதியில் சிங்கள மேலாதிக்கம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளதை இவ்வளைவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.